டெல்லி போலீசாரால் கன்னத்தில் அறைந்தும், உதைக்கப்பட்டும், தாக்கபட்ட ஆம் ஆத்மி எம்.எல்.ஏ


டெல்லி போலீசாரால் கன்னத்தில் அறைந்தும், உதைக்கப்பட்டும், தாக்கபட்ட ஆம் ஆத்மி எம்.எல்.ஏ
x
தினத்தந்தி 1 Oct 2020 8:35 AM IST (Updated: 1 Oct 2020 8:35 AM IST)
t-max-icont-min-icon

ஹத்ரஸ் கும்பல் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கபட்ட பெண்ணின் உடல் குறித்து கேட்டபோது டெல்லி போலீஸ் கன்னத்தில் அறைந்தும், உதைக்கப்பட்டும் தாக்கபட்ட ஆம் ஆத்மி எம்.எல்.ஏ அஜய் தத் கூறி உள்ளார்.

புதுடெல்லி:

உத்தரபிரதேசம் ஹத்ரஸ் மாவட்டத்தில் உயர்சாதி ஆண்களால் 19 வயது சிறுமி  பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பலத்த காயங்களுடன் கிடந்த அப்பெண் மீட்கப்பட்டு, ஒரு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இளைஞர்கள் தாக்கியதில், அப்பெண்ணுக்கு முதுகு தண்டுவடம் நொறுங்கி இருப்பதும், பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. 

உடல்நிலை மோசமடைந்ததால், டெல்லியில் உள்ள சப்தர்ஜங் ஆஸ்பத்திரிக்கு அந்த பெண் மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார். இதை தொடர்ந்து பாதிக்கபட்ட பெண்ணின் குடும்பத்தினர் மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த நிலையில் டெல்லியின் அம்பேத்கர் நகர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த எம்.எல்.ஏ தத், பாதிக்கப்பட்ட பெண்ணின் உடல் எங்குள்ளது என்று விசாரித்தபோது, ​​அவரை ஒரு அறைக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று டெல்லி காவல்துறை அதிகாரிகளால் தாக்கபட்டு உள்ளார்

சப்தர்ஜங் மருத்துவமனையில் ஹத்ரஸ் கும்பல் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்கச் சென்றபோது டெல்லி காவல்துறையினரால் தாக்கப்பட்டதாக ஆம் ஆத்மி கட்சியின்  எம்எல்ஏ அஜய் தத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து எம்.எல். ஏ அஜய் தத் கூறியதாவது;-

"அவர்கள் என் காலரை பிடித்து இழுத்து ஒரு அறைக்கு அழைத்துச் சென்றார்கள், அங்கே நான் அதிகாரிகளால் தாக்கப்பட்டேன். அவர்கள் என் கன்னத்தில் அறைந்து உதைத்தனர். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிக்கு கொடுக்கபட்ட  மரியாதை இதுவாக இருந்தால், சாதாரண மனிதர்களைப் பற்றி சிந்தியுங்கள்"

Next Story