ஒரே நாளில் அடுத்தடுத்து உத்தரபிரதேசத்தை உலுக்கும் பாலியல் பலாத்கார சம்பவங்கள்
ஒரே நாளில் அடுத்தடுத்து ஆங்காங்கே நடக்கும் பாலியல் பலாத்கார சம்பவங்கள் உத்தரபிரதேசத்தை உலுக்கி வருகின்றன.
புதுடெல்லி:
உத்தரபிரதேசம் ஹத்ரஸ் மற்றும் பால்ராம்பூரில் கூட்டு பாலியல்பலாத்காரத்தால் 2 பெண்கள் பலியானார்கள். இந்த சம்பவத்தின் செய்தியை எழுதி முடிப்பதற்குள், உத்தரபிரதேசத்தின் புலந்த்ஷாக மற்றும் அசாம்கர் மாவட்டங்களில் இரண்டு சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது
அசாம்கரில், ஜியான்பூர் பகுதியில் 8 வயது சிறுமி தனது 20 வயது பக்கத்து வீட்டு இளைஞரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. குற்றவாளியை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
அதுபோல் புலந்த்ஷாகரில் ககூர் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் ஒரு சிறுமி தனது பக்கத்து வீட்டு நபரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவரது தந்தையின் புகாரின் அடிப்படையில், ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன" என்று புலந்த்ஷாகர் எஸ்எஸ்பி சந்தோஷ்குமார் சிங் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story