டெல்லியில் இன்று மேலும் 3,037 பேருக்கு கொரோனா பாதிப்பு - மாநில சுகாதாரத்துறை


டெல்லியில் இன்று மேலும் 3,037 பேருக்கு கொரோனா பாதிப்பு - மாநில சுகாதாரத்துறை
x
தினத்தந்தி 1 Oct 2020 6:23 PM IST (Updated: 1 Oct 2020 6:23 PM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் இன்று மேலும் 3,037 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் கடந்த மாத ஆரம்பத்தில் இருந்தே கொரோனா பாதிப்பு தினமும் புதிய உச்சத்தை தொட்டே அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநில அரசு மற்றும் சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில், டெல்லி சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, டெல்லியில் இன்று மேலும் 3,037 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவிக்கத்துள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,82,752 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரேநாளில் மாநிலத்தில் 40 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,401 ஆக உயர்ந்துள்ளது.

டெல்லியில் இன்று 3,167 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,50,613 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் தற்போது வரை 26,738 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


Next Story