எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்: 3 இந்திய வீரர்கள் வீர மரணம்
காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் 3 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
ஸ்ரீநகர்,
காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் உள்ள நவுகம் செக்டாரில், இன்று பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறலில் இரண்டு இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்ததனர். பூஞ்ச் மாவட்டத்தில் கிருஷ்ணா காடி பகுதியில் நேற்று நள்ளிரவு அத்துமீறலில் ஒரு வீரர் வீரமரணம் அடைந்ததாக இந்திய ராணுவத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
மேலும் அவர், இந்த தாக்குதலில் மேலும் 4 வீரர்கள் காயம் அடைந்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாகிஸ்தான் ராணுவத்திற்கு, இந்திய ராணுவ தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது என கூறினார்.

Related Tags :
Next Story