எந்த விவசாயியும் ஒரு டிராக்டர் எரிக்க அனுமதிக்க மாட்டார்: அரசியல் லாபத்திற்காக எரிக்கப்படுகின்றன - ராஜ்நாத் சிங்


எந்த விவசாயியும் ஒரு டிராக்டர் எரிக்க அனுமதிக்க மாட்டார்: அரசியல் லாபத்திற்காக எரிக்கப்படுகின்றன - ராஜ்நாத் சிங்
x
தினத்தந்தி 1 Oct 2020 7:17 PM IST (Updated: 1 Oct 2020 7:17 PM IST)
t-max-icont-min-icon

எந்த விவசாயியும் ஒரு டிராக்டர் எரிக்க அனுமதிக்க மாட்டார் என்று அரசியல் லாபத்திற்காக எரிக்கப்படுகின்றன என்று ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

மத்திய அரசு சமீபத்தில் நிறைவேற்றிய 3 வேளாண்மை சட்ட மசோதாக்களுக்கு எதிராக, அரியானா, உத்தரப் பிரதேசம் பஞ்சாபில் விவசாயிகள் ‘ரெயில் ராகோ’ என்ற பெயரில் ரெயில் நிறுத்த போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். பஞ்சாப் மாநிலத்தில் 8-வது நாளாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வியாழக்கிழமை முதல் காலவரையறையற்ற ரயில் மறியல் போராட்டத்திலும் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் போராட்டத்தின்போது டிராக்டரை எரித்தது விவசாயிகளுக்கு அவமானகரமான செயல் என்று மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

போராட்டத்தைக் கைவிட்டுத் தாங்கள் சந்திக்கும் பிரச்சினைகளை அரசிடம் விளக்க விவசாய சங்கங்கள் முன்வர வேண்டும். ஒரு விவசாயியின் மகனாகக் கூறுகிறேன், விவசாயிகளுக்கு எதிராக மோடி அரசு நிச்சயம் செயல்படாது. விவசாயிகள் தாங்கள் சந்திக்கும் பிரச்சினைகளை அரசு கவனத்தில் கொள்ளும் வகையில் விவசாய சங்கங்கள் தெளிவுபடுத்த வேண்டும்.

'விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதார விலை ஆண்டுதோறும் அதிகரிக்கப்படும்.

ஒரு ராணுவ வீரர் தனது ஆயுதங்களை மதிப்பதை போல ஒரு விவசாயி தனது டிராக்டர் மற்றும் விவசாய உபகரணங்களை மதிக்க வேண்டும்.

போராட்டத்தின்போது டிராக்டர் எரிக்க எந்த விவசாயியும் அனுமதிக்க மாட்டார். இது ஒரு அரசியல் கட்சியால் தங்கள் சொந்த லாபங்களுக்காக செய்யப்படுகிறது.  இது விவசாயிகளுக்கு அவமானகரமான செயல். ராணுவ வீரர்கள் தங்களது ஆயுதங்களை மேன்மையாகக் கருதுவது போன்று விவசாயிகள் தங்கள் தளவாடப் பொருள்களை மதிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story