கொரோனாவுக்கு திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. பலி


கொரோனாவுக்கு திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. பலி
x
தினத்தந்தி 2 Oct 2020 5:05 AM IST (Updated: 2 Oct 2020 5:05 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா பாதிப்புக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. பலியாகி உள்ளார்.

கொல்கத்தா,

மேற்கு வங்காள மாநிலம் பங்குரா மாவட்டம் இந்துஸ் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக 2-வது தடவையாக பணியாற்றி வந்தவர், குருபாத மீட்டி.

அவர் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். ஹவுரா மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். அவருக்கு வயது 51.

குருபாத மீட்டி, இருதய மற்றும் சிறுநீரக கோளாறுகளாலும் அவதிப்பட்டு வந்ததாக ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்தது.

Next Story