ஹாத்ராஸ் சம்பவம்:காவல் கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர் உள்ளிட்ட அதிகாரிகள் இடைநீக்கம் - முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அதிரடி உத்தரவு


ஹாத்ராஸ் சம்பவம்:காவல் கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர் உள்ளிட்ட அதிகாரிகள் இடைநீக்கம் - முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அதிரடி உத்தரவு
x
தினத்தந்தி 2 Oct 2020 9:28 PM IST (Updated: 2 Oct 2020 9:28 PM IST)
t-max-icont-min-icon

ஹத்ராஸில் பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக காவல் கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர் உள்ளிட்ட அதிகாரிகள் இடைநீக்கம் செய்து உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

உத்தரப்பிரதேசம்,

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்தாரஸ் என்ற கிராமத்தில் 19 வயது இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு , மிக கொடூரமான முறையில் தாக்கப்பட்ட அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.உயிரிழந்த பெண்ணின் உடலை பெற்றோரிடம் ஒப்படைக்காமல் போலீசாரே தகனம் செய்ததால் சர்ச்சை எழுந்தது.இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ஹத்ராஸில் பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக நடைபெற்று வந்த முதற்கட்ட விசாரணை அறிக்கையின் அடிப்படையில் காவல் கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர் உள்ளிட்ட அதிகாரிகள் இடைநீக்கம்செய்து உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

Next Story