ஹத்ராஸ் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பேரணி


ஹத்ராஸ் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பேரணி
x
தினத்தந்தி 3 Oct 2020 4:53 PM IST (Updated: 3 Oct 2020 4:53 PM IST)
t-max-icont-min-icon

ஹத்ராஸ் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நடத்தி வரும் பேரணியில் 1000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

கொல்கத்தா,

உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தை சேர்ந்த 19 வயதான பட்டியில் இனத்தை சேர்ந்த இளம்பெண், சமீபத்தில் உயர்சாதி வாலிபர்கள் 4 பேரால்  பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவமும், அதையொட்டி அவரது சடலத்தை இரவோடு இரவாக எரித்த விதமும், இறுதியில் ஆஸ்பத்திரி தரப்பின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டும் என அடுத்தடுத்த அதிர்ச்சிகள் வெளியாகி வருகின்றன. இளம்பெண் உயிரிழந்து 3 நாட்கள் ஆகியும் இதன் பாதிப்பும் தாக்கமும் மக்களுக்கு இன்னும் விலகவில்லை.

இதை கண்டித்து போராட்டங்கள் வெடித்தன.. அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரமுகர்கள் வரை இதற்கு நியாயம் கேட்டனர்.. ட்விட்டரிலும் ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகின.. எதிர்க்கட்சிகள் இந்த போராட்டத்தை கையில் எடுத்து வருகிறது

இந்த கொடூரமான சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பெரிய போராட்டங்கள் வெடித்துள்ளன.

இந்நிலையில் உத்தரபிரதேசம் ஹத்ராஸில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து மேற்குவங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தலைமையில் 1000க்கும் மேற்பட்டோர் பேரணியில் கலந்து கொண்டனர். இந்த பேரணி கொல்கத்தா பிர்லா பிளானட்டேரியத்திலிருந்து காந்தி மூர்த்தி வரை நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

Next Story