ஹத்ராஸ் சென்று பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் ராகுல்காந்தி
உத்தரபிரதேசம் ஹத்ராஸ் சென்று பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தை நேரில் சந்தித்து ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆறுதல் கூறினர்.
லக்னோ,
உத்தரபிரதேசம் ஹத்ராஸ் மாவட்டத்தி8ல் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதில் படுகாயமடைந்து உயிரிழந்த இளம்பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க காங்கிரஸ் எம்.பி., ராகுல்காந்தி, அவரது சகோதரி பிரியங்காகாந்தி மற்றும் காங்கிரஸ் எம்.பி.,க்கள் சென்றனர்.
பிரியங்காகாந்தி காரை ஓட்டி செல்ல, அவர் அருகில் ராகுல்காந்தி அமர்ந்திருந்தார். எம்.பி.,க்கள் மற்றொரு வாகனத்தில் சென்றனர். 30 எம்.பி.,க்கள் வரை ஹத்ராஸ் சென்றனர். இதனையடுத்து டெல்லி - நொய்டா நெடுஞ்சாலையில் குவிந்து இருந்த போலீசார் காங்கிரஸ் தலைவர்கள் வந்த வாகனத்தை தடுத்து நிறுத்தினர்.
ஹத்ராஸ் கிராமத்திற்கு ராகுல்காந்தி, மற்றும் பிரியங்காவுடன் மேலும் 3 பேர் மட்டுமே செல்ல அனுமதி வழங்கினர். மற்றவர்களை நெடுஞ்சாலையிலேயே தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டனர். தங்களையும் அனுமதிக்க வேண்டும் என அங்கு திரண்ட காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.
இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினரை ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

Related Tags :
Next Story