அக்டோபர் 16 முதல் மத்திய பட்ஜெட் தயாரிப்புப் பணிகள் தொடக்கம்


அக்டோபர் 16 முதல் மத்திய பட்ஜெட் தயாரிப்புப் பணிகள் தொடக்கம்
x
தினத்தந்தி 3 Oct 2020 8:14 PM IST (Updated: 3 Oct 2020 8:14 PM IST)
t-max-icont-min-icon

அக்டோபர் 16 முதல் மத்திய பட்ஜெட் தயாரிப்புப் பணிகள் தொடங்கப்படும் என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

ஆண்டுதோறும் பிப்ரவரி மாத இறுதியில் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்,

2021- 2022ம் ஆண்டு பட்ஜெட் தயாரிப்பதற்காக வரும் 16ம் தேதி முதல் அதற்கான முதற்கட்டப் பணிகள் தொடங்கவிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சரிவை ஈடுகட்டும் வகையில், பட்ஜெட் தயாரிப்புகள் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதில் மத்திய அரசின் நிதி செயலாளர்கள், செலவுச் செயலாளர்கள் மற்றும் நிதி ஆலோசகர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

நவம்பர் முதல் வாரம் பட்ஜெட் தயாரிப்புப் பணிகள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கூட்டங்களில், மத்திய அரசின் நிதியுதவியோடு செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளன.

Next Story