ஹத்ராஸ் சம்பவம்: மகளை கடைசியாக ஒரு முறை கூட பார்க்க முடியவில்லை என குடும்பத்தினர் வருத்தத்துடன் கூறினர் - பிரியங்கா காந்தி பேட்டி


ஹத்ராஸ் சம்பவம்: மகளை கடைசியாக ஒரு முறை கூட பார்க்க முடியவில்லை என குடும்பத்தினர் வருத்தத்துடன் கூறினர் - பிரியங்கா காந்தி பேட்டி
x
தினத்தந்தி 3 Oct 2020 8:46 PM IST (Updated: 3 Oct 2020 9:04 PM IST)
t-max-icont-min-icon

ஹாத்ராஸ் சம்பவம், மகளை கடைசியாக ஒரு முறை கூட பார்க்க முடியவில்லை என குடும்பத்தினர் வருத்தத்துடன் தெரிவித்ததாக பிரியங்கா காந்தி கூறினார்.

லக்னோ,

உத்தரபிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினரை ராகுல் காந்தி, பிரியங்காந்தி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.  கே.சி.வேணுகோபால், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, முகல் வாஸ்னிக்கும் ராகுல்காந்தியுடன் சென்றனர்.

ஹத்ராஸ் சென்று பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை சந்தித்த பின் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினர் தங்கள் மகளை கடைசியாக ஒரு முறை கூட பார்க்க முடியவில்லை என்று வேதனையுடன் தெரிவித்தனர். உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்  தனது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்.  நீதி கிடைக்கும் வரை நாங்கள் இந்த போராட்டத்தை தொடருவோம் என்றார்.

Next Story