கல்வான் மோதலில் வீரமரணம் அடைந்த 20 வீரர்களுக்கு லடாக்கில் போர் நினைவு சின்னம்


கல்வான் மோதலில் வீரமரணம் அடைந்த 20 வீரர்களுக்கு லடாக்கில் போர் நினைவு சின்னம்
x
தினத்தந்தி 4 Oct 2020 4:10 AM IST (Updated: 4 Oct 2020 4:10 AM IST)
t-max-icont-min-icon

கல்வான் மோதலில் வீரமரணம் அடைந்த 20 வீரர்களுக்கு லடாக்கில் போர் நினைவு சின்னம் அமைக்கப்பட்டுள்ளது

புதுடெல்லி,

லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த ஜூன் மாதம் 15-ந் தேதி இந்திய வீரர்களுக்கும், சீன வீரர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். அதேபோல் சீனா தரப்பிலும் பலர் கொல்லப்பட்டனர். ஆனால் அதுபற்றிய விவரங்களை சீனா வெளியிடவில்லை.

இந்த நிலையில் கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் வீரமரணம் அடைந்த இந்திய வீரர்கள் 20 பேருக்கு லடாக்கில் போர் நினைவு சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. கிழக்கு லடாக்கின் ஷையோக் தவுலத் பெக் ஒல்டி சாலையில் உள்ள கேம்-120 போஸ்ட் அருகே இந்த போர் நினைவுச்சின்னம் எழுப்பப்பட்டுள்ளது. அதில், நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த 20 வீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளதோடு, அவர்களின் வீரதீர செயல்கள் குறித்தும் கூறப்பட்டுள்ளது. மேலும் ஜூன் 15-ந் தேதி நடந்த சம்பவம் பற்றி அதில் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story