புதிய வேளாண் சட்டங்களை விவசாயிகள் யாரும் எதிர்க்கவில்லை: பிரகாஷ் ஜவடேகர்
புதிய வேளாண் சட்டங்களை விவசாயிகள் யாரும் எதிர்க்கவில்லை என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
பனாஜி,
மத்திய அரசால் 'வேளாண் உற்பத்தி-வா்த்தகம்-வணிகச் சட்டம்', 'விவசாயிகள் விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாயிகள் சேவை சட்டம்', அத்தியாவசிய உணவுப் பொருள்கள் திருத்தச் சட்டம்' ஆகிய மூன்று சட்டங்கள் அண்மையில் இயற்றப்பட்டன. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்தன. குறிப்பாக இந்த சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப்பில் விவசாயிகள் தீவிர போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் கோவாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய மத்திய அமைச்சர் வேளாண் சட்டங்களுக்கு விவசாயிகளிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக தெரிவித்தார். மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: “ மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை விவசாயிகள் யாரும் எதிர்க்கவில்லை. பஞ்சாபில் மட்டுமே இன்னும் போராட்டம் நடக்கிறது. பஞ்சாப்பில் காங்கிரஸ் ஆட்சி நடப்பதால், இந்த போராட்டங்கள் கூட இயல்பிலேயே அரசியல் கொண்டது.
கள நிலவரம் என்னவெனில், வேளாண் சட்டங்களை விவசாயிகள் வரவேற்கின்றனர். ஜி.எஸ்.டி காரணமாக நமக்கு ஒரே நாடு ஒரே வரி என்ற முறை கிடைத்தது. தற்போது, ஒரு நாடு ஒரு சந்தை முறை வேளாண் சட்டங்களால் கிடைத்துள்ளது. தேசிய தேர்வு முகமை மூலம் ஒரே நாடு ஒரே தேர்வு கிடைத்துள்ளது. ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தையும் கூட நாங்கள் அறிமுகம் செய்துள்ளோம்” என்றார்.
Related Tags :
Next Story