பீகார் சட்டப் பேரவை தேர்தல் கூட்டணி - ஜெ.பி. நட்டா, அமித்ஷா முக்கிய ஆலோசனை


பீகார் சட்டப் பேரவை தேர்தல் கூட்டணி - ஜெ.பி. நட்டா, அமித்ஷா முக்கிய ஆலோசனை
x
தினத்தந்தி 4 Oct 2020 1:18 PM IST (Updated: 4 Oct 2020 1:18 PM IST)
t-max-icont-min-icon

பீகார் சட்டப் பேரவை தேர்தல் குறித்து டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவின் இல்லத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

புதுடெல்லி,

243 உறுப்பினர்கள் கொண்ட பீகார் மாநில சட்டமன்றத்தின் பதவிக் காலம் நவம்பர் 29-ம் தேதியுடன் முடிவடையை உள்ளது. இதையடுத்து புதிய உறுப்பினர்களை தேர்வு செய்ய தேர்தல் 3 கட்டங்களாக நடத்தப்படுகிறது. அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் நவம்பர் 7 ஆகிய நாட்களில் வாக்குப்பதிவு நடத்தப்படும். 

3 கட்ட தேர்தல்களிலும் பதிவான வாக்குகள் நவம்பர் 10-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  

இந்த நிலையில் பீகார் சட்டப் பேரவை தேர்தல் மற்றும் கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து தற்போது அக்கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவின் இல்லத்தில் ஆலோசனை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த  கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, பீகார் மாநில துணை முதலமைச்சர் சுஷில் மோடி, புபேந்தர் யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். பா.ஜ.க. கூட்டணிக்கு  எதிராக அங்கு லாலுவின் ஆர்.ஜே.டி மற்றும்  காங்கிரஸ் கட்சி மெகா கூட்டணியை அமைத்து உள்ளது. 

Next Story