மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானுக்கு இருதய அறுவை சிகிச்சை


மத்திய அமைச்சர்  ராம்விலாஸ் பாஸ்வானுக்கு  இருதய அறுவை சிகிச்சை
x
தினத்தந்தி 4 Oct 2020 1:26 PM IST (Updated: 4 Oct 2020 1:26 PM IST)
t-max-icont-min-icon

மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானுக்கு டெல்லி மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

புதுடெல்லி,

மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானுக்கு டெல்லி மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக அவரது மகனும் லோக் ஜனசக்தி கட்சி தலைவருமான சிராக் பாஸ்வான் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். 

இதுதொடர்பாக அவர் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்க பதிவில், "என தந்தை கடந்த பல நாள்களாக டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

நேற்று மாலை நிகழ்ந்த சில திடீர் முன்னேற்றங்கள் காரணமாக, அவரது இதய அறுவை சிகிச்சை  இரவில் நடத்தப்பட்டது. தேவை ஏற்பட்டால், வரும் வாரங்களில் மற்றொரு அறுவை சிகிச்சை நடத்தப்படலாம்.இந்த தருணத்தில் எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி "என்று சிராக் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.

Next Story