பஞ்சாப் மக்கள் இந்தியாவின் முதுகெலும்புகள்: பிரதமர் மோடி இந்த முதுகெலும்பை உடைப்பது ஏன்? - ராகுல் காந்தி கேள்வி


பஞ்சாப் மக்கள் இந்தியாவின் முதுகெலும்புகள்: பிரதமர் மோடி இந்த முதுகெலும்பை உடைப்பது ஏன்?  - ராகுல் காந்தி கேள்வி
x
தினத்தந்தி 4 Oct 2020 7:24 PM IST (Updated: 4 Oct 2020 7:24 PM IST)
t-max-icont-min-icon

பஞ்சாப் மக்கள் இந்தியாவின் முதுகெலும்புகள், பிரதமர் மோடி இந்த முதுகெலும்பை உடைப்பது ஏன்? என ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.

சண்டிகர்,

பஞ்சாபில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தில் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தி கலந்துகொண்டு டிராக்டர் பேரணியை தொடக்கி வைத்தார்.

முதற்கட்டமாக பாத்னி கலான் பகுதி முதல் ஜாத்பூர் வரை டிராக்டர் பேரணி நடைபெற்றது. இதற்கு ராகுல்காந்தி தலைமை தாங்கினார்.

பின்னர் லூதியானாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது:-

பஞ்சாப் மக்கள் நாட்டிற்கே உணவு வழங்குகிறார்கள், அவர்கள் இந்தியாவின் முதுகெலும்புகள் சிலருக்கு பயனளிப்பதற்காக பிரதமர் மோடி இந்த முதுகெலும்பை உடைப்பது ஏன்? மேலும் இதனை ஒருபோதும் காங்கிரஸ் அனுமதிக்க விடாது என்றார்.

Next Story