ரூபாய் நோட்டுகள் மூலம் கொரோனா வைரஸ் பரவ வாய்ப்பு-ரிசர்வ் வங்கி எச்சரிக்கை


ரூபாய் நோட்டுகள் மூலம் கொரோனா வைரஸ் பரவ வாய்ப்பு-ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
x
தினத்தந்தி 5 Oct 2020 12:22 PM IST (Updated: 5 Oct 2020 12:22 PM IST)
t-max-icont-min-icon

ரூபாய் நோட்டுகள் மூலம் கொரோனா வைரஸ் பரவ சாத்தியம் இருப்பதாக ரிசர்வ் வங்கி எச்சரித்து உள்ளது.

புதுடெல்லி

மத்திய நிதியமைச்சகத்துக்கு அனைத்து இந்திய வர்த்தகர்கள் கூட்டமைமைப்பான சிஏஐடி (CAIT) ரூபாய் நோட்டுகள் மூலம் கொரோனா வைரஸ் பரவ சாத்தியம் உள்ளதா என  கடிதம் எழுதியிருந்தத. இதனை ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி பதில் அளிக்கும்படி நிதியமைச்சகம் கேட்டுக் கொண்டிருந்தது.

இதையடுத்து ரிசர்வ் வங்கி அளித்துள்ள பதிலில், ரூபாய் நோட்டுகள் பேக்டீரியாக்கள், கொரோனா உள்ளிட்ட வைரஸ்களை தாங்கிச் செல்லக்கூடியவை என தெரிவித்துள்ளது.

மேலும் ரூபாய் நோட்டுகள் மூலம் கொரோனா பரவலை தடுக்க டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க ஊக்கத் தொகைகளை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் எனவும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது

Next Story