டார்பிடோவை ஏவ உதவும் சூப்பர்சானிக் ஏவுகணையான ஸ்மார்ட் சோதனை வெற்றி


டார்பிடோவை ஏவ உதவும் சூப்பர்சானிக் ஏவுகணையான ஸ்மார்ட் சோதனை வெற்றி
x
தினத்தந்தி 5 Oct 2020 4:28 PM IST (Updated: 5 Oct 2020 4:28 PM IST)
t-max-icont-min-icon

டார்பிடோவை ஏவ உதவும் சூப்பர்சானிக் ஏவுகணை (ஸ்மார்ட்) ஒடிசா கடலையொட்டிய வீலர் தீவில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

புவனேஷ்வர்,

டார்பிடோவை ஏவ உதவும் சூப்பர்சானிக் ஏவுகணை (ஸ்மார்ட்) ஒடிசா கடலை ஒட்டிய வீலர் தீவில் இன்று முற்பகல் 11.45-மணிக்கு வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

வேகக் குறைப்பு மெக்கானிசத்தை நிலை நிறுத்துதல், டார்பிடோவை வெளிதள்ளுதல், மூக்கு கூம்பு பிரிதல் உள்ளிட்ட அனைத்து இயக்க நோக்கங்களும் கச்சிதமாக நிறைவேற்றப்பட்டது.

கடற்பகுதியை ஒட்டி உள்ள கண்காணிப்பு நிலையங்கள்(ரேடார்கள், ஆப்டிக்கல் சிஸ்டம்கள்) மற்றும் கீழ்நிலை கப்பல்கள் உள்ளிட்ட டெலிமெட்ரி நிலையங்கள் அனைத்து நிகழ்வுகளையும் கண்காணித்தன. நீர்மூழ்கி எதிர்ப்பு போர் செயல்பாடுகளுக்கான குறைந்த எடை கொண்ட நீர்மூழ்கி எதிர்ப்பு டார்பிடோ முறையை டார்பிடோவின் இலக்கைத் தாண்டியும் ஏவ உதவும் ஏவுகணை ஸ்மார்ட் ஆகும். நீழ்மூழ்கி எதிர்ப்பு போர் திறன்களை நிறுவுவதில் இந்த ஏவுகணை சோதனையும், செயல்விளக்கமும் குறிப்பிடத்தக்க ஒன்றாக திகழ்கிறது.

இந்த சாதனைகளுக்காக பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், டிஆர்டிஓ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Next Story