ராகுல் காந்தியுடன் தொடர்பிலிருந்த பஞ்சாப் அமைச்சருக்கு கொரோனா
ராகுல் காந்தியுடன் ஒரே மேடையில் அமர்ந்து இருந்த பஞ்சாப் அமைச்சர் பால்பீர் சிங் சித்துவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமிர்தசர்ஸ்,
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் மாநிலத்தில் தீவிர போராட்டம் நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியும் பஞ்சாப் மாநிலத்தில் கடந்த திங்கள் கிழமை, வேளாண் சட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் நடத்தப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்டார்.
இந்தப் போராட்டத்தில் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் மற்றும் அமைச்சர் பால்பீர் சிங் சித்து ஆகியோர் பங்கேற்றனர். இதன்பிறகு, வேளாண் சட்டங்களுக்கு எதிராக ராகுல் காந்தி தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இன்று பிற்பகல் போராட்டத்தைத் தொடர அவர் ஹரியாணா மாநிலத்துக்குச் சென்றுள்ளார்.
இந்த நிலையில், ராகுல் காந்தியுடன் ஒரே மேடையில் அமர்ந்து இருந்த அமைச்சர் பால்பீர் சிங் சித்துவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தற்போது நலமுடன் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
Related Tags :
Next Story