மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கொரோனா தொற்று உறுதி


மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 7 Oct 2020 10:56 PM IST (Updated: 7 Oct 2020 10:56 PM IST)
t-max-icont-min-icon

மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

டெல்லி,

இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் உள்ளது. இருப்பினும் கொரோனா தொற்று காரணமாக அரசியல் தலைவர்கள், மருத்துவர்கள், காவல்துறையினர் மற்றும் பொதுப் பணிகளில் உள்ளவர்கள் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “நான் கொரோனா பரிசோதனை செய்து கொண்டேன். சோதனையின் முடிவில் பாசிட்டிவ் என்று வந்துள்ளது. எனக்கு எந்த அறிகுறியும் இல்லாததால், மருத்துவர்கள் ஆலோசனையின் பேரில் வீட்டு தனிமைப்படுத்துதலில் உள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Next Story