இந்திய விமான படையின் 88வது ஆண்டு தினம்; சாகச நிகழ்ச்சியில் ஈடுபட்ட வீரர்கள் + "||" + 88th Anniversary of the Indian Air Force; Players involved in the adventure show
இந்திய விமான படையின் 88வது ஆண்டு தினம்; சாகச நிகழ்ச்சியில் ஈடுபட்ட வீரர்கள்
இந்திய விமான படையின் 88வது ஆண்டு தினத்தினை முன்னிட்டு வீரர்களின் சாகச நிகழ்ச்சிகள் இடம் பெற்று வருகின்றன.
லக்னோ,
இந்திய விமான படையின் 88வது ஆண்டு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி மற்றும் மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் ஆகியோர் படை வீரர்களுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.
இந்திய விமான படையின் 88வது ஆண்டு தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக உத்தர பிரதேசத்தில் உள்ள ஹிண்டன் விமானபடை தளத்தில் இந்திய விமான படை வீரர்கள் சாகச நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில், இந்திய விமான படையில் இடம் பெற்றுள்ள பல்வேறு ரக விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் போர் விமானங்கள் உள்ளிட்டவை சாகச செயல்களில் ஈடுபட்டன.
இந்திய விமான படையின் சினூக் ரக ஹெலிகாப்டர்களில் வீரர்கள் உயரே பறந்தனர். அபாச்சே மற்றும் மி-35 ரக தாக்குதல் ஹெலிகாப்டர்களும் வானில் பறந்து சாகசங்களை நிகழ்த்தின.
இவற்றில் குறிப்பிடத்தக்க வகையில், ரபேல் போர் விமானம் ஆனது ஹாக்கி மைதானம் ஒன்றை விட சிறிய பரப்பு கொண்ட பகுதியில் வானில், எட்டு எண் வடிவில் சுற்றி வந்து காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.