கொரோனாவுக்கு எதிராக போராட அனைவரும் ஒன்றிணைவோம்; நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்


கொரோனாவுக்கு எதிராக போராட அனைவரும் ஒன்றிணைவோம்; நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்
x
தினத்தந்தி 8 Oct 2020 11:41 AM IST (Updated: 8 Oct 2020 11:41 AM IST)
t-max-icont-min-icon

கொரோனாவுக்கு எதிராக போரில் நாம் அனைவரும் ஒன்றிணைவோம் என்று நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதுடெல்லி,

இந்தியாவில் தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா தொற்றுக்கு எதிராக போராட அனைவரும் இணைவோம் என பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

இதுபற்றி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான போரானது மக்கள் சார்ந்தது.  கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் சுகாதார பணியாளர்களால் அவர்கள் பலம் பெறுகின்றனர்.

இந்த வைரசில் இருந்து நம்முடைய குடிமக்களை பாதுகாக்கும் பணியை நாம் தொடர வேண்டும்.  நமது கூட்டு முயற்சியானது பலரது உயிரை காப்பாற்றி உள்ளது.  கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் அனைவரும் இணைந்து போராடுவோம்.

எப்பொழுதும் நீங்கள் நினைவில் கொள்ளுங்கள்.  முக கவசம் அணிய வேண்டும்.  கைகளை கழுவி கொள்ளுங்கள்.  சமூக இடைவெளியை கடைப்பிடியுங்கள்.  ஒன்றிணைந்து வெற்றி பெறுவோம்.  ஒன்றிணைவோம்.  கொரோனாவுக்கு எதிராக நாம் வெற்றி பெறுவோம் என அதில் அவர் தெரிவித்து உள்ளார்.

Next Story