தேசிய செய்திகள்

இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் தொடர்ந்து 13 வது ஆண்டாக முகேஷ் அம்பானி முதலிடம் + "||" + Forbes India Rich List 2020: Mukesh Ambani wealthiest, Serum Institute’s Cyrus Poonawalla among top 10. Full list

இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் தொடர்ந்து 13 வது ஆண்டாக முகேஷ் அம்பானி முதலிடம்

இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் தொடர்ந்து 13 வது ஆண்டாக முகேஷ் அம்பானி முதலிடம்
இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் தொடர்ந்து 13 வது ஆண்டாக முகேஷ் அம்பானி முதலிடத்தில் உள்ளார்.கொரோனா தடுப்பூசி சோதனையில் ஈடுபட்டு வரும் புனேவின் சீரம் இன்ஸ்டிடியூட் இந்தியாவின் சைரஸ் பூனவல்லா ஆறாம் இடத்தில் உள்ளார்.
புதுடெல்லி

இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலை, போர்ப்ஸ் இந்தியா வெளியிட்டுள்ளது. அதில் ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி, 13-வது ஆண்டாக இம்முறையும் முதலிடத்தை பிடித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு $88.7 பில்லியனாக உள்ளது. இது இந்திய மதிப்பில் 6.50 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.

தொழிலதிபர் அதானி, இரண்டாம் இடத்தில் இருக்கிறார். அவரது மொத்த சொத்து மதிப்பு $25.2 பில்லியனாக உள்ளது.

$20.4 பில்லியன் சொத்து மதிப்புடன் எச்.சி.எல் நிறுவனர் ஷிவ் நாடார் மூன்றாமிடத்தில் உள்ளார். 

$15.4 பில்லியன் சொத்து மதிப்புடன் தொழிலதிபர் ராதாகிஷான் தாமனி நான்காம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்

$12.8 பில்லியன் சொத்து மதிப்புடன் ஹிந்துஜா பிரதர்ஸ் கோடீஸ்வரர்கள் பட்டியலில் ஐந்தாம் இடத்தில் உள்ளனர் 

கொரோனா தடுப்பூசி சோதனையில் ஈடுபட்டு வரும் புனேவின் சீரம் இன்ஸ்டிடியூட் இந்தியாவின் சைரஸ் பூனவல்லா $11.5 பில்லியன் சொத்து மதிப்புடன் இந்த பட்டியலில் ஆறாம் இடத்தில் உள்ளார்.  

$11.4 பில்லியன் சொத்து மதிப்புடன் கட்டிட தொழிலில் கொடிகட்டிப் பறக்கும் பல்லோஞ்சி மிஸ்திரி, ஏழாம் இடத்தில் உள்ளார்.

$11.3 பில்லியன் சொத்து மதிப்புடன் கோடாக் மஹிந்திரா வங்கி இயக்குநர், உதய் கோடாக், எட்டாவது இடத்தை பிடித்துள்ளார்.

$11 பில்லியன் சொத்து மதிப்புடன் தொழிலதிபர் கோத்ரேஜ் குடும்பம் பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. 

$10.3 பில்லியன் சொத்து மதிப்புடன் ஏர்டெல் குழும தலைவர் பாரதி மிட்டல், பத்தாவது இடத்தில் உள்ளார்.