போர் சூழ்நிலையில் ஆதிக்கம் செலுத்த உதவும் இந்தியாவின் விமானப்படை போர் விமானங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்


போர் சூழ்நிலையில் ஆதிக்கம் செலுத்த உதவும் இந்தியாவின் விமானப்படை போர் விமானங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்
x
தினத்தந்தி 8 Oct 2020 4:20 PM GMT (Updated: 8 Oct 2020 4:30 PM GMT)

நாட்டின் இறையாண்மையை பாதுகாக்க விமானப்படை எப்போதும், எந்த சூழலிலும் தயாராக இருக்கும் என்று உறுதி அளிப்பதாக தளபதி ஆர்.கே.எஸ்.பதாரியா தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி

உத்தரபிரதேசத்தில் ஹிண்டன் விமானப்படை தளத்தில் நடைபெற்ற விமானப்படை ஆண்டு விழாவில் பேசிய அவர் இதனை கூறினார். கொரோனா தொற்று பரவிய காலத்திலும் கூட, விமானப்படை முழு செயல்வேகத்துடன் உள்ளதாக அவர் கூறினார்.

நாட்டின் வட எல்லையில் ஏற்பட்ட பிரச்சினையின் போது உடனடியாக களமாடிய அனைத்து வீரர்களுக்கும் பாராட்டு தெரிவித்த அவர், நாட்டின் ராணுவத்திற்கு உதவும் வகையில் விமானப்படை குறுகிய காலத்திற்குள் தயார் நிலையில் காத்திருக்கும் என்றார். 

ஆசிய பிராந்தியத்தில் சீனாவுக்கு அடுத்தபடியாக பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் இந்திய முதலிடத்தில் உள்ளது. இந்திய பொருளாதாரத்தை அழிக்க சீனா போன்ற நாடுகள் முயற்சித்து வருகின்றன. அதற்கு பாகிஸ்தான் நேபாளம் போன்ற நாடுகளையும் பயன்படுத்துகிறது.  பல ரூபங்களில் சில அண்டை நாடுகள் அனைத்திலும் இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளதால் இப்பொழுது நாம் நம் இராணுவ பலத்தை அதிகரிப்பதன் மூலம் அண்டை நாடுகளை கதிகலங்க செய்ய முடியும்.

அக்டோபர் 8, 1932 முதல் இந்திய விமானப்படை தினம் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி நாட்டின் 88வது இந்திய விமானப்படை தினம் இன்று கொண்டாடப்படுகிறது. 

அக்டோபர் 8, 1932ல் நிறுவப்பட்ட இந்திய விமானப் படை உலகின் மிக அதிநவீன விமானங்களை கொண்டதாகக் கருதப்படுகிறது. நாட்டின் எல்லைகளின் பாதுகாப்பிற்காக உயர்தர போர் விமானங்கள் வாங்கப்படுகின்றன. ஒரு போர் சூழ்நிலையில் நம் இந்திய ராணுவ அதிகாரிகள் ஆதிக்கம் செலுத்த உதவும் சில போர் விமானங்களைப் பற்றி பார்ப்போம்.

மிராஜ்- 2000 இது பிரஞ்சு வம்சாவளி விமானம். இது ஒற்றை இருக்கை போர் விமானமாகும். ஒரு மணி நேரத்திற்கு 2,495 கி.மீ வேகத்தில் இலக்கை அடைய முடியும்.  மிராஜ் -2000  விமானத்தில் இரண்டு 30 மிமீ ஒருங்கிணைந்த பீரங்கிகள், இரண்டு மாட்ரா சூப்பர் 530D நடுத்தர  மற்றும் இரண்டு R-550 மேஜிக் II நெருங்கிய போர் ஏவுகணைகளைக் கொண்டுள்ளது.

சூ-30 மிகிMKIசுகோய் என்று பிரபலமாக அழைக்கப்படும் இந்த போர் விமானம் இரட்டை இருக்கைகளை கொண்டது. இந்த விமானம் ரஷியாவௌச் சேர்ந்தது மற்றும் ஒரு எக்ஸ்30 மிமீ ஜிஎஸ்எச் துப்பாக்கியுடன் 8000 கிலோ வெளிப்புற ஆயுதங்களைக் கொண்டுள்ளது. போர் விமானம் பல்வேறு நேரங்களில் கடுமையான சூழ்நிலையிலும் வழிகாட்டப்பட்ட இடத்தில் விமான ஏவுகணைகளை கொண்டு தாக்கும் திறன் கொண்டது. இந்த விமானம் அடையக்கூடிய அதிகபட்ச வேகம் மணிக்கு 2,500 கி.மீ ஆகும்.

ஜாகுவார் 1979 ம் ஆண்டில் இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்டது. இது ஆங்கிலோ-பிரஞ்சு வம்சாவளியைச் சேர்ந்தது. நீண்ட தூரங்களில் உள்ள எதிரி ஆயுதத்தை தாக்க இதை பயன்படுத்தலாம். இந்த விமானம் அதிக வேகத்தில் குறைந்த உயரத்தில் பறக்கும். இந்த விமானம் அடையக்கூடிய அதிகபட்ச வேகம் மணிக்கு 1,350 கி.மீ. ஆகும்.

ரஃபேல்: இந்த விமானம், மிராஜ் -2000 போன்றது, முன்னணி பிரெஞ்சு இராணுவ விமான உற்பத்தியாளரான டசால்ட் ஏவியேஷன் இதை தயாரித்துள்ளது. இது பல்வேறு செயல்பாடுகளைச் செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளதால் இது ‘ஓம்னிரோல்’ விமானம் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஜெட் விமானத்தின் அதிகபட்ச வேகம் மணிக்கு 2,222 கி.மீ. ஆகும். சமீபத்திய செய்தி அறிக்கையின்படி, இந்தியாவில் ஏற்கனவே 5 ரஃபேல் ஜெட் விமானங்களை நிலையில், மேலும் அதிக ரஃபேல் ஜெட் விமானங்களை வாங்க திட்டமிட்டுள்ளதாக செய்தி வந்துள்ளது.

தேஜாஸ்: இந்தியாவின் முன்னணி விமான உற்பத்தியாளரான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் தயாரித்த இந்த விமானம் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் போர் விமானமாகும், இது 2016ம் ஆண்டில் விமானப் படையில் சேர்க்கப்பட்டது. 

தேஜாஸ் அதிகபட்சமாக மணிக்கு 2,205 கிமீ வேகத்தில் பறக்கும். வளர்ந்து வரும் தொழில் நுட்ப காரணமாக, ஒரு நாடு பிற நாடுகளை அச்சுறுத்தும் வகையிலும் தன்னை தற்காத்துக் கொள்ளும் வகையிலும் இதுபோன்று புது ரக ராணுவ உபகரணங்களை வாங்கி குவிக்கிறது.


Next Story