ஹத்ராஸ் பெண்ணை அவரது குடும்பத்தினரே கொன்றனர் கைதான குற்றவாளி சொல்கிறார்


ஹத்ராஸ் பெண்ணை அவரது குடும்பத்தினரே கொன்றனர் கைதான குற்றவாளி சொல்கிறார்
x
தினத்தந்தி 9 Oct 2020 11:03 AM GMT (Updated: 9 Oct 2020 11:03 AM GMT)

ஹத்ராஸ் பெண்ணை அவரது குடும்பத்தினரே கொன்றனர் கைதான குற்றவாளி சொல்கிறார்

புதுடெல்லி

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது பட்டியலின இளம் பெண் கடந்த மாதம்  அதே பகுதியைச் சேர்ந்த  தாக்கூர் சமூகத்தைச் சேர்ந்த நான்கு பேரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். நாக்கு துண்டாகி, முதுகுத் தண்டில் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட அவர் இரண்டு வாரத் தொடர் மருத்துவச் சிகிச்சைக்குப் பிறகு, மருத்துவமனையில் உயிரிழந்தார்.

உயிரிழந்த பிறகு, அவரது உடல் தகனத்தில் போலீசார் நடத்திய கெடுபிடி அவசத்ரதின் காரணமாகவே இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது. இந்த விவகாரத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள நான்கு பேருக்கும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும், உத்தரப்பிரதேசத்தில் இது போன்ற தொடர் குற்றங்கள் நடப்பது தடுக்கப்பட வேண்டும் என்றும் பலதரப்பட்ட மக்கள் தெரிவித்து வருகின்றனர்.

குற்றம்சாட்டப்பட்ட இளைஞர்களில் முதன்மைக் குற்றவாளியாக கருதப்படும் சந்தீப் சிங், காவல்துறை எஸ்.பிக்கு எழுதியுள்ள கடிதத்தில், “நாங்கள் நான்கு பேரும் அப்பாவிகள். மரணமடைந்த பெண் எனக்கு தோழி. நாங்கள் இருவரும் பேசுவது அவரது குடும்பத்துக்கு பிடிக்காத காரணத்தால் அவரைத் துன்புறுத்தி தாக்கியிருக்கிறார்கள். அதனால் அவர மரணமடைந்திருக்கிறார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினர், “நாங்கள் ஏற்கனவே வேதனையில் இருக்கிறோம். எங்களின் குழந்தையை இழந்துவிட்டோம். இப்போது எங்களை அவமதிக்கிறார்கள். எங்களுக்கு நியாயம் வேண்டும். இழப்பீடு எதுவும் தேவையில்லை. அவர்களுடன் எங்களுக்குத் தொடர்பில்லை. ” என்று தெரிவித்துள்ளனர்.

இது போன்ற பெண்கள் குறிப்பிட்ட சில இடங்களில்தான் இறந்து கிடக்கின்றனர். கரும்புத் தோட்டம், திணை வயல்கள் அல்லது புதர்களில் கிடக்கிறார்கள். ஏன் இவர்கள் நெல் வயலிலோ கோதுமை வயலிலோ இறந்துபோவதில்லை? இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும்வரை கைது செய்த நான்கு பேரையும் விடுவிக்க வேண்டும். நிச்சயமாகச் சொல்கிறேன் அவர்கள் நிரபராதிகள். அவர்களை விடுவிக்காவிட்டால் மன ரீதியான துன்பத்தை அனுபவிப்பார்கள். இழந்த அவர்களின் இளமையை யார் திருப்பித் தருவார்கள். அரசாங்கம் அவர்களுக்கு இழப்பீடு வழங்குமா?” என உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக தலைவரான ஸ்ரீவஸ்தவா பேசியுள்ளார்.


Next Story