உத்தர பிரதேசத்தில் சாலை விபத்து: 3 பேர் பலி; முதல் மந்திரி இரங்கல்
உத்தர பிரதேசத்தில் சாலையில் சென்ற பேருந்து விபத்திற்குள்ளானதில் 3 பேர் பலியாகி உள்ளனர்.
அலிகார்,
நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகளால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பின்னர் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதன் ஒரு பகுதியாக பேருந்து சேவைகளும் தொடங்கியுள்ளன.
இந்நிலையில், உத்தர பிரதேசத்தின் கான்பூர் நகரில் இருந்து டெல்லி நோக்கி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது. அந்த பேருந்தில் 45 பயணிகள் இருந்துள்ளனர். பேருந்து அலிகார் மாவட்டம் தப்பல் என்ற இடத்தில் சென்றபொழுது திடீரென விபத்திற்குள்ளானது.
இந்த சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 5 பேர் காயமடைந்தனர். இதுபற்றி அறிந்த முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்து உள்ளார். விபத்தில் காயமடைந்தோருக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படுவது பற்றி உறுதி செய்யும்படி மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டு உள்ளார்.
Related Tags :
Next Story