இந்தியாவில் இதுவரை 8.57 கோடி கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன: ஐசிஎம்ஆர் தகவல்


இந்தியாவில்  இதுவரை 8.57 கோடி கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன: ஐசிஎம்ஆர் தகவல்
x
தினத்தந்தி 10 Oct 2020 2:02 PM IST (Updated: 10 Oct 2020 2:04 PM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் இதுவரை 8.57- கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யபட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

நாட்டில் இதுவரை 8.57 கோடி  கொரோனா ரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை விரைவாக கண்டறிந்து மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்கும் நோக்கில் இந்தியாவில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருகிறது.  

அந்தவகையில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஒரே நாளில் 11,64,018 லட்சம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. இதனால் மொத்த கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 8,57,98,698-ஆக அதிகரித்துள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. 

Next Story