ஹத்ராஸ் பெண்ணின் குடும்பத்தினர் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள மறுப்பு- மருத்துவர்கள் தகவல்
ஹத்ராஸ் மாவட்டத்தில் 20- வயது இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது.
புதுடெல்லி,
உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் 20-வயது இளம் பெண், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை ராகுல்காந்தி உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் சந்தித்து ஆறுதல் கூறினர்.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதாக மருத்துவர்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, பெண்ணின் குடும்ப உறுப்பினர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய மருத்துவக்குழு திட்டமிட்டது. இதன்படி, அவர்கள் வீட்டிற்கு நேரடியாக மருத்துவர்கள் சென்ற நிலையில், கொரோனா பரிசோதனை செய்து கொள்ள குடும்ப உறுப்பினர்கள் மறுத்துள்ளனர். இந்த தகவலை கொரோனா பரிசோதனை மேற்கொள்ள சென்ற மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற சென்ற, உள்ளூர் அரசியல் தலைவர்கள் மற்றும் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காவலர்கள் என பலருக்கு கொரோனா தொற்று ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story