இந்திய ராணுவ வீரர்களுக்கு குண்டு துளைக்காத வாகனங்கள் இல்லை - காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி


இந்திய ராணுவ வீரர்களுக்கு குண்டு துளைக்காத வாகனங்கள் இல்லை - காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி
x
தினத்தந்தி 10 Oct 2020 4:59 PM IST (Updated: 10 Oct 2020 4:59 PM IST)
t-max-icont-min-icon

ராணுவ வீரர்களுக்கு, குண்டு துளைக்காத டிரக்குகள், வாங்கி தர இயலாமல், பிரதமருக்கு 8,400 கோடி ரூபாய் மதிப்பில் நவீன விமானம் வாங்கியிருப்பது நியாயமா? என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, தமது டிவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடியை விமர்சித்து பல்வேறு பதிவுகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் அவர் தனது டுவிட்டரில், ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணிகளுக்கு ஆயத்தமாக வாகனங்களில் செல்லும் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மேலும் அந்த பதிவில், “ராணுவ வீரர்களுக்கு, குண்டு துளைக்காத டிரக்குகள், வாங்கி தர இயலாமல், பிரதமருக்கு 8 ஆயிரத்து 400 கோடி ரூபாய் மதிப்பில் நவீன விமானம் வாங்கியிருப்பது நியாயமா?” என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். இது சமூக வலைத்தளங்களில் தற்போது விவாதப் பொருளாகி உள்ளது. 

Next Story