தெலுங்கானா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்த 48 மணிநேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு
தெலுங்கானா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்த 48 மணிநேரத்தில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் கனமழை பெய்து வருகிறது.
இந்தநிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
அடுத்த 48 மணிநேரத்தில் தெலுங்கானா, கர்நாடகா, ஒடிசா மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் அதிகமாக மழை பெய்யும். இதனால் அக்.,10 - 14 வரை அந்தமான் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். வங்காள விரிகுடாவின் கிழக்கு - மத்திய மற்றும் தென்கிழக்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகும்.
இது அடுத்த 24 மணிநேரத்தில் மத்திய வங்காள விரிகுடாவை நோக்கி நகரும். அடுத்தடுத்த 24 மணி நேரத்திற்கு பிறகு மேலும் தீவிரமடைந்து, இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஆந்திரப் கடற்கரையை அக்., 12 மதியம் / நண்பகல் நேரத்தில் கடக்க வாய்ப்புள்ளது.
இதன் காரணமாக அக்.,12 ஆம் தேதி கடலோர ஆந்திரா மற்றும் யானம் (புதுச்சேரி), ஒடிசா, கொங்கன் மற்றும் கோவா ஆகியவற்றில் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் மிக அதிக மழை பெய்யும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story