தலீபான்களுடனான அமைதி ஒப்பந்தம் இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு தீங்கு விளைவிக்காது ஆப்கானிஸ்தான் அமைதி குழு தலைவர் பேட்டி
ஆப்கானிஸ்தானில் அந்த நாட்டு அரசுக்கும் தலீபான் பயங்கரவாத அமைப்புக்கும் இடையில் நடந்து வரும் நீண்ட கால உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டுவரும் விதமாக கத்தார் தலைநகர் தோகாவில் இருதரப்பு இடையே கடந்த மாதம் 12-ந் தேதி முதல் அமைதிப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
புதுடெல்லி,
ஆப்கானிஸ்தானில் அந்த நாட்டு அரசுக்கும் தலீபான் பயங்கரவாத அமைப்புக்கும் இடையில் நடந்து வரும் நீண்ட கால உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டுவரும் விதமாக கத்தார் தலைநகர் தோகாவில் இருதரப்பு இடையே கடந்த மாதம் 12-ந் தேதி முதல் அமைதிப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இதில் ஆப்கானிஸ்தான் அரசு தரப்பில் “தேசிய நல்லிணக்கத்திற்கான ஆப்கான் உயர்நிலை சபை” என்கிற குழு தலீபான் பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்தக் குழுவின் தலைவராக உள்ள ஆப்கானிஸ்தானின் மூத்த அரசியல்வாதியான அப்துல்லா அப்துல்லா 5 நாள் அரசு முறை பயணமாக கடந்த செவ்வாய்க்கிழமை இந்தியா வந்தார். அவர் பிரதமர் நரேந்திர மோடி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால், மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் ஆகியோரை தனித்தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்நிலையில் டெல்லியில் நேற்று தனியார் செய்தி நிறுவனத்துக்கு அப்துல்லா அப்துல்லா பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தலீபான்களுடனான இந்த அமைதி ஒப்பந்தம் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும். இது கண்ணியமாகவும் நிலையானதாகவும் நீடித்ததாகவும் இருக்க வேண்டும். மேலும் இந்த அமைதி ஒப்பந்தம் இந்தியா உட்பட எந்தவொரு நாட்டின் தேசிய பாதுகாப்புக்கும் தீங்கு விளைவிக்காது. ஆப்கானிஸ்தானுக்கு உதவிய, ஆப்கானிஸ்தானுக்கு பங்களித்த நாடு இந்தியா. அது ஆப்கானிஸ்தானின் நெருங்கிய நட்பு நாடாகும்.
தலீபான்களுடன் இந்தியா நேரடியாக பேச வேண்டும் என நாங்கள் கோரவில்லை. ஏனெனில் ஒரு குழுவுடன் எவ்வாறு ஈடுபட வேண்டும் அல்லது எவ்வாறு ஈடுபடக்கூடாது என்பதை இந்தியா தீர்மானிக்க வேண்டும் எனவே அது குறித்து நான் பரிந்துரைக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story