பீகாரில் ரெயில்வே நிலையத்தில் 18 கிலோ தங்கம் பறிமுதல்; ஒருவர் கைது
பீகாரில் பாட்னா ரெயில்வே நிலையத்தில் கடத்த முயன்ற 18 கிலோ தங்கம் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.
பாட்னா,
கேரளாவில் தூதரகத்திற்கு வந்த பார்சலில் 30 கிலோ தங்கம் சட்டவிரோத வகையில் அனுப்பி வைக்கப்பட்ட விவகாரத்தினை தொடர்ந்து தங்க கடத்தல் விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. இதுபற்றி தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் மற்றும் அமலாக்க துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வழக்கில் 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்நிலையில், பீகாரின் பாட்னா ரெயில்வே நிலையத்தில் சந்தேகத்திற்குரிய வகையில் திரிந்த நபர் ஒருவரை அரசு ரெயில்வே போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதில் அந்நபரிடம் இருந்து 18.39 கிலோ எடை கொண்ட தங்கம் மற்றும் ரூ.2.30 லட்சம் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. அவரிடம் விசாரணை செய்ததில் அதற்குரிய ஆவணங்கள் இல்லை என கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து இந்த விவகாரம் பற்றி வருமான வரி துறை அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story