மராட்டியத்தில் தீபாவளிக்கு முன் பள்ளிகள் திறக்கப்படாது; பள்ளி கல்வி மந்திரி


மராட்டியத்தில் தீபாவளிக்கு முன் பள்ளிகள் திறக்கப்படாது; பள்ளி கல்வி மந்திரி
x
தினத்தந்தி 11 Oct 2020 2:02 PM IST (Updated: 11 Oct 2020 2:02 PM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் தீபாவளி பண்டிகைக்கு முன் பள்ளி கூடங்கள் திறக்கப்படாது என்று பள்ளி கல்வி மந்திரி வர்ஷா கெய்க்வாட் கூறியுள்ளார்.

புனே,

நாட்டில் கொரோனா பாதிப்புகள் அதிகம் கொண்ட மாநிலம் ஆக மராட்டியம் உள்ளது.  மராட்டியத்தில் இதுவரை 15.17 லட்சம் பேர் கொரோனா பாதிப்புகளுக்கு ஆளாகி உள்ளனர்.

இதேபோன்று நாட்டில் மிக அதிக அளவாக மராட்டியத்தில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்புகளுக்கு பலியாகி உள்ளனர்.  இந்நிலையில், நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில் அடுத்தடுத்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இதன்படி, வருகிற 15ந்தேதி முதல் பள்ளி கூடங்களை திறப்பதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.  இந்த நிலையில் மராட்டிய பள்ளி கல்வி மந்திரி வர்ஷா கெய்க்வாட் இன்று கூறும்பொழுது, தீபாவளி பண்டிகைக்கு முன் பள்ளி கூடங்கள் நிச்சயம் திறக்கப்படாது என்று தெரிவித்து உள்ளார்.

Next Story