கேரளாவில் இன்று 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா


கேரளாவில் இன்று 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா
x
தினத்தந்தி 11 Oct 2020 6:20 PM IST (Updated: 11 Oct 2020 6:20 PM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பாதிப்பு உச்சத்தில் உள்ளது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பாதிப்பு உச்சத்தில் உள்ளது. குறிப்பாக நேற்று மட்டும் 11 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது. 

இந்த நிலையில், இன்று ஒரே நாளில் 9,347-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கேரளாவில்  கொரோனா தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 96 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 

 மலப்புரம், எர்ணாகுளம், கோழிக்கோடு ஆகிய 3 மாவட்டங்களில் ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


Next Story