பீகாரில் பரிதாபம்: பெண்ணை பலாத்காரம் செய்து ஆற்றில் வீசிய கும்பல்; 5 வயது மகன் உயிரிழப்பு


பீகாரில் பரிதாபம்:  பெண்ணை பலாத்காரம் செய்து ஆற்றில் வீசிய கும்பல்; 5 வயது மகன் உயிரிழப்பு
x
தினத்தந்தி 12 Oct 2020 7:05 AM IST (Updated: 12 Oct 2020 7:05 AM IST)
t-max-icont-min-icon

பீகாரில் 5 வயது மகனுடன் இருந்த பெண்ணை கும்பல் ஒன்று பாலியல் பலாத்காரம் செய்து ஆற்றில் வீசியதில் சிறுவன் உயிரிழந்துள்ளான்.

பக்சார்,

பீகாரின் பக்சார் மாவட்டத்தில் தனது 5 வயது மகனுடன் இருந்த பெண்ணை கும்பல் ஒன்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளது.  இதன்பின்னர் அவர்கள் இருவரையும் அந்த கும்பல் ஆற்றில் தள்ளியுள்ளது.

இந்த சம்பவத்தில் சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்து உள்ளான்.  அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடி விட்டது.  இதுபற்றி அந்த பெண் போலீசில் புகார் அளித்துள்ளார்.

இதனை தொடர்ந்து போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்து உள்ளனர்.  அந்த பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளது.  அவரது மகனின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.  இந்த சம்பவம் பற்றி தும்ராவன் டி.எஸ்.பி. கே.கே. சிங் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில் தொடர்புடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.  இந்த வழக்கில் உள்ள உண்மை விவரங்கள் பற்றி விசாரணை நடத்தி வருகிறோம் என சிங் கூறியுள்ளார்.

Next Story