இமாச்சலபிரதேச முதல்-மந்திரி ஜெய்ராம் தாகூருக்கு கொரோனா தொற்று


இமாச்சலபிரதேச முதல்-மந்திரி ஜெய்ராம் தாகூர்
x
இமாச்சலபிரதேச முதல்-மந்திரி ஜெய்ராம் தாகூர்
தினத்தந்தி 12 Oct 2020 2:35 PM IST (Updated: 12 Oct 2020 2:35 PM IST)
t-max-icont-min-icon

இமாச்சலபிரதேச முதல்-மந்திரி ஜெய்ராம் தாகூருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிம்லா,

இந்தியாவில் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. கொரோனா தொற்றால் மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் என மக்கள் பிரதிநிதிகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.  இந்த நிலையில், இமாச்சலபிரதேச முதல்-மந்திரி ஜெய்ராம் தாகூர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். 

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதல்-மந்திரி ஜெய்ராம் தாகூர், “ நான் கொரோனா பரிசோதனை செய்து கொண்டேன் அதில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவர்கள் ஆலோசனைப்படி வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்.  கடந்த காலங்களில் என்னை தொடர்பு கொண்டவர்கள், கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள்” என தெரிவித்துள்ளார். 

Next Story