இரண்டு கடன் திட்டங்கள் இந்திய ரிசர்வ் வங்கி மூலம் மாநிலங்களுக்கு நிறைவேற்றித் தரப்படும் - நிர்மலா சீதாராமன்


இரண்டு கடன் திட்டங்கள் இந்திய ரிசர்வ் வங்கி மூலம் மாநிலங்களுக்கு நிறைவேற்றித் தரப்படும் - நிர்மலா சீதாராமன்
x
தினத்தந்தி 12 Oct 2020 6:12 PM GMT (Updated: 12 Oct 2020 6:12 PM GMT)

மாநிலங்களின் ஜிஎஸ்டி வருமானக் குறைவை ஈடுகட்ட இரண்டு கடன் திட்டங்கள் இந்திய ரிசர்வ் வங்கி மூலம் மாநிலங்களுக்கு நிறைவேற்றித் தரப்படும் என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீத்தாராமன் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் மாநிலங்களுக்கு ஏற்பட்டுள்ள ஜி.எஸ்.டி. இழப்பீடு குறித்து ஆலோசிக்கப்பட்டது.

செஸ் வரி மூலம் வசூலாகாத மாநிலங்களில் ஏற்பட்டுள்ள இழப்பீட்டை சரி செய்ய இரண்டு கடன் திட்டங்களை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீத்தாராமன் அறிவித்துள்ளார். இதற்கு 12 மாநிலங்கள் ஒப்புதல் அளித்தன. 9 மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு பின் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீத்தாராமன் கூறியதாவது:-

மாநிலங்களின் ஜிஎஸ்டி வருமானக் குறைவை ஈடுகட்ட இரண்டு கடன் திட்டங்கள் இந்திய ரிசர்வ் வங்கி மூலம் மாநிலங்களுக்கு நிறைவேற்றித் தரப்படும். இந்த திட்டங்கள் குறித்து மாநிலங்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும் கருத்து அடிப்படையில் ஜிஎஸ்டி கவுன்சில் இறுதி முடிவு எடுக்கும்.  

மத்திய அரசால் தற்போதைய சூழ்நிலையில் ஏன் கடன் வாங்க இயலாது என்பது குறித்து மாநிலங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதனை 12 மாநிலங்கள் ஏற்றுக் கொண்டிருக்கின்றன. இருப்பினும் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.  சிலர் நாளை காலை எங்களை அணுகுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக இந்த கூட்டத்தில் பேசிய தமிழக அமைச்சர் ஜெயக்குமார், தமிழகத்துக்கான ஜி.எஸ்.டி. இழப்பீட்டுத் தொகை ரூ 10,774.98 கோடியை உடனே வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Next Story