தொடரும் கொடூரம்... தூங்கி கொண்டு இருந்த 3 சிறுமிகள் மீது ஆசிட் வீச்சு


தொடரும் கொடூரம்... தூங்கி கொண்டு இருந்த 3 சிறுமிகள் மீது ஆசிட் வீச்சு
x
தினத்தந்தி 13 Oct 2020 1:20 PM IST (Updated: 13 Oct 2020 1:20 PM IST)
t-max-icont-min-icon

உத்தரபிரதேசத்தில் தொடர்ந்து பெண்கள் மீதான வன்முறை அதிகரித்து வருகிறது.தூங்கி கொண்டு இருந்த 3 சிறுமிகள் மீது ஆசிட் வீசப்பட்டது.

கோண்டா

உத்தரபிரதேசத்தின் கோண்டா பராஸ்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாஸ்கா கிராமத்தில் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த மூன்று சகோதரிகள் மீது ஆசிட் வீசப்பட்டது. பாதிக்கபட்ட  மூன்று பேரும் 8, 12, மற்றும் 17 வயதுடைய சகோதரிகள். அடையாளம் தெரியாத நபரால் ஆசிட் தாக்கௌதலுக்கு உள்ளானார்கள் . தாக்குதலின் போது 3 பேரும் தூங்கிக் கொண்டிருந்தனர். சிறுமிகளில் இரண்டு பேருக்கு சிறு தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன, ஒருவர் முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக கோண்டா போலீசார்  யாரையும் கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

போலீஸ் விசாரணையில் கூறப்படுவதாவது:-

முதற்கட்ட விசாரணையில் வீட்டில் திறந்து இருந்த ஜன்னலில் வழியாக மர்ம நபர் ஆசிட் வீசி உள்ளார்.

மூத்த சகோதரிக்கு முகம் மற்றும் மார்பில் பலத்த காயம் ஏற்பட்டது, மேலும் இரண்டு சகோதரிகளுக்கு கைகளில் சிறு காயங்கள் உள்ளன. அவர்கள் மூவரும் கோண்டா மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தாக்குதல் நடத்தியவர் குடும்பத்தைப் பற்றி அறிந்திருந்ததாகவும், இரண்டாவது மாடியில் ஒரு அறையில் சிறுமி தூங்குவதை அறிந்திருப்பதாகவும் அவர் கூறினார். தாக்குதல் நடத்தியவர் மற்றும் குற்றத்தின் பின்னணியில் உள்ள காரணத்தை  இன்னும் கண்டறியப்படவில்லை.

மூன்று சகோதரிகளும் தோபி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் தாழ்த்தபட்ட சாதி பிரிவின் கீழ் வருவதாகவும் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.



Next Story