ரெயில்வே பிளாட்பாரத்தில் பெற்றோருடன் உறங்கிய சிறுமி பாலியல் வன்கொடுமை: குற்றவாளி சுட்டு பிடிப்பு
ரெயில்வே பிளாட்பாரத்தில் பெற்றோருடன் உறங்கிய 4 வயது சிறுமியை தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தவனை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த போலீசார்.
பெங்களூர்
கர்நாடக மாநிலம் ஸ்ரீராமபுராவில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் மனைவி மற்றும் 4 வயது மகளுடன் தகரக் கொட்டகை அமைத்து தங்கி பொம்மை வியாபாரம் செய்து வந்துள்ளார். கடந்த 10ஆம் தேதி பெய்த மழையில் கொட்டகைக்குள் தண்ணீர் புகுந்துவிடவே, சங்கோலி ராயண்ணா ரெயில்நிலையம் பின்புறமுள்ள பிளாட்பாரம் ஒன்றில் தஞ்சமடைந்துள்ளனர்.
நள்ளிரவில் மர்ம நபர் ஒருவன் தூங்கிக் கொண்டிருந்த சிறுமியை தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் அதே பகுதியைச் சேர்ந்த தினேஷ் என்பவனை தேடி வந்தனர்.
திங்கட்கிழமை அதிகாலை போலீசார் தேடுதல் வேட்டையில் கண்ணில் சிக்கிய தினேஷ், உதவி ஆய்வாளரை கத்தியால் தாக்கிவிட்டு தப்ப முயன்றுள்ளான். இதனையடுத்து அவன் காலில் துப்பாக்கியால் சுட்டு போலீசார் கைது செய்தனர்.தினேஷ் சென்னைய சேர்ந்தவர்.
Related Tags :
Next Story