இந்து மருமகளுக்கு, முஸ்லீம் மாமியார் வளைக்காப்பு தனிஷ்க் விளம்பர சர்ச்சை -அப்படி விளம்பரத்தில என்ன இருக்கு...?


இந்து மருமகளுக்கு, முஸ்லீம் மாமியார் வளைக்காப்பு  தனிஷ்க் விளம்பர சர்ச்சை -அப்படி விளம்பரத்தில என்ன இருக்கு...?
x
தினத்தந்தி 13 Oct 2020 11:33 AM GMT (Updated: 2020-10-13T17:03:34+05:30)

இந்து மருமகளுக்கு, முஸ்லீம் மாமியார் வளைக்காப்பு நடத்துவது போன்ற விளம்பரம்... சமூக வலைதளங்களில் விவாத பொருளாக மாறிய தனிஷ்க் நகைக் கடை விளம்பரம்

புதுடெல்லி

பிரபல டைட்டன் குழுமத்தைச் சேர்ந்த தனிஷ்க் நகை நிறுவனத்தின் விளம்பரம் ஒன்று, சமூக வலைதளங்களில் விவாதப்பொருளாக மாறி உள்ளது. 

இந்து மதத்தைச் சேர்ந்த இளம் கர்ப்பிணி பெண்ணுக்கு, முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த அவரின் மாமியார் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்துவது போன்ற விளம்பரம் ஒன்றை கடந்த வாரம் தனிஷ்க் நிறுவனம் வெளியிட்டு இருந்தது.

இது லவ் ஜிஹாத்தை ஊக்குவிக்கும் வகையில் உள்ளதாக கூறி, பலரும் எதிர்ப்பு தெரிவித்ததாலும் டுவிட்டரில் Boycott Tanishq என்ற ஹேஷ்டாக் டிரெண்ட் ஆனதாலும் விளம்பரத்தை யூடியூப்பில் இருந்து தனிஷ்க் நிறுவனம் நீக்கியது.

இந்த நிலையில், இந்து-முஸ்லீம் ஒற்றுமையை விளக்கும் வகையிலான விளம்பரத்தை நீக்கியதற்காக எம்.பி. சசி தரூர் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்பி  சசி தரூர் டைட்டன் குழுமத்தின் விளம்பரத்திற்கு ஆதரவு தெரிவித்து உள்ளார்.

இந்து-முஸ்லீம் “ஏகத்வம்” விளமபரம் “இந்துத்துவா தலைவர்களை” இவ்வளவு எரிச்சலூட்டினால், “உலகில் இந்து-முஸ்லீம் ஒற்றுமையின் மிக நீண்ட காலமாக எஞ்சியிருக்கும்  இந்தியா என்ற அடையாளத்தை அவர்கள் ஏன் புறக்கணிக்கக்கூடாது?” என்று கூறினார்.

இதற்கிடையில், தேசிய பெண்கள் ஆணையத்தின் முன்னாள் உறுப்பினர் எஸ்.ஹமீனா ஷாஃபிக், விளம்பரத்திற்கு  ஆதரவாக "அழகான தனிஷ்க் விளம்பரங்களை கவனிக்க வைத்ததற்கு நன்றி! என கூறினார்

நடிகை கங்கனா ரனாவத்  பல மட்டங்களில் விளம்பரம் தவறாக உள்ளது  இது 'லவ் ஜிஹாத்' மட்டுமல்ல, பாலியல் உணர்வையும் ஊக்குவிக்கிறது என்று கூறினார்.

அப்படி விளம்பரத்தில என்ன இருக்கு...?

கடந்த வாரம் வெளியிடப்பட்ட  விளம்பரத்தில் சேலை அணிந்த கர்ப்பிணிப் பெண் ஒரு வயதான பெண்மணியால்(அவரது மாமியார்) வளைகாப்பு விழாவிற்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.

வீடியோவில், கர்ப்பிணிப் பெண் வயதான பெண்மணியிடம் கேட்கிறார்: "ஆனால் ஏன் இந்த விழா உங்கள் வீட்டில் நடத்தப்படவில்லை ...".

அந்த பெண்மணி பதிலளிக்கிறார்: "ஒவ்வொரு வீட்டிலும் மகள்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பது ஒரு பாரம்பரியம் அல்லவா?" என்கிறார்

வீடியோவின் விளக்கம்: “பெண் ஒருவர் தனது சொந்தக் குழந்தையைப் போலவே தன்னை நேசிக்கும் ஒரு குடும்பத்தில் திருமணம் செய்து கொண்டார். அவருக்காக மட்டுமே, அவர்கள் வழக்கமாகச் செய்யாத ஒரு கலாசாரத்தை கொண்டாட அவர்கள் வெளியே செல்கிறார்கள். மரபுகள், கலாச்சாரங்கள் என்ற இரண்டு வெவ்வேறு மதங்களின் அழகான சங்கமம் என கூறப்பட்டு உள்ளது.


Next Story