கொரோனா பாதிப்புக்கும் வயதுக்கும் தொடர்பு இல்லை: ஆய்வில் தகவல்
கொரோனா பாதிப்புக்கும் வயதுக்கும் தொடர்பு இல்லை என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
புதுடெல்லி,
கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கும், வயதுக்கும் இடையேயான தொடர்பு குறித்து ஜப்பான் நாட்டின் ஹொக்கைடோ பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் உள்ளிட்ட விஞ்ஞானிகள் ஒரு ஆய்வை மேற்கொண்டனர். இத்தாலி, ஸ்பெயின், ஜப்பான் ஆகிய நாடுகளில் இருந்து வெளியான தரவுகளின் அடிப்படையில் இந்த ஆய்வை அவர்கள் நடத்தினர். இந்த ஆய்வின் முடிவை அவர்கள் ‘சயின்டிபிக் ரிப்போர்ட்ஸ்’ பத்திரிகையில் வெளியிட்டு இருக்கிறார்கள். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-
* ஒரு நபரின் வயது, அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவதை தீர்மானிக்காது. அதாவது வயதுக்கும், கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படுவதற்கும் தொடர்பு இல்லை.
* கொரோனா அறிகுறிகளின் வளர்ச்சி, நோயின் தீவிரம், இறப்பு ஆகியவை ஒருவரின் வயதை சார்ந்தது.
* அதிக வயதானோர் கொரோனாவின் தீவிர அறிகுறிகளுக்கு ஆளாகி இறக்கிறார்கள்.
* வயதானோர் இறக்க 2 அம்சங்கள் அடிப்படை. ஒன்று, அவர்களது கூடுதல் வயதால் எந்த அளவுக்கு தொற்று நோய்க்கு ஆளாக நேரிடுகிறது என்பது நோயாளிகளின் எண்ணிக்கையில் பிரதிபலிக்கிறது. இரண்டாவது, அவர்கள் வயது மூப்பால் எந்த அளவுக்கு நோயின் கடுமையான பாதிப்புக்கு ஆளாகிறார்கள் என்பது இறப்பு எண்ணிக்கையில் பிரதிபலிக்கிறது.
இவ்வாறு விஞ்ஞானிகள் கண்டறிந்து கூறி உள்ளனர்.
Related Tags :
Next Story