யானை மேல் இருந்து கீழே விழுந்த பாபா ராம்தேவ் - யானை மீது ஏறி யோகா செய்த போது விபத்து


யானை மேல் இருந்து கீழே விழுந்த பாபா ராம்தேவ் - யானை மீது ஏறி யோகா செய்த போது விபத்து
x
தினத்தந்தி 14 Oct 2020 5:23 AM GMT (Updated: 2020-10-14T11:18:23+05:30)

யானை மீது ஏறி யோகா செய்த பாபா ராம்தேவ், கீழே விழுந்த காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

மதுரா,

பதஞ்சலி நிறுவனம் என்ற பெயரில் பல்வேறு பொருட்களை தயார் செய்து விற்பனை செய்து வருபவர் யோகா குரு பாபா ராம்தேவ். இவரது நிறுவனம் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக அறிவித்து சர்ச்சையில் சிக்கியது.

இந்த நிலையில் மதுராவில் உள்ள ஆசிரமத்தில் அங்குள்ள மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பாபா ராம்தேவ் யோகா செய்து காண்பித்தார். அப்போது யானை மீது ஏறி யோகா செய்யும் நிகழ்வின் போது, யானை அசைந்ததில் பாபா ராம்தேவ் தவறி கீழே விழுந்தார். அவர் கீழே விழுந்ததை பார்த்தவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

கீழே விழுந்த உடனே ராம்தேவ் எதுவும் நடக்காதவர் போல எழுந்து நின்றார். இருந்தபோதும் அவருக்கு முதுகு தண்டில் பலத்த அடிபட்டு உள்ளதாக கூறப்படுகிறது. யானை மீது ஏறி யோகா செய்த பாபா ராம்தேவ், கீழே விழுந்த காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. 

Next Story