கடந்த 4 வாரங்களில் கேரளாவில் செயலில் உள்ள கொரோனா பாதிப்புகள் 233% அதிகரித்துள்ளன.


கடந்த 4 வாரங்களில் கேரளாவில் செயலில் உள்ள கொரோனா பாதிப்புகள் 233% அதிகரித்துள்ளன.
x
தினத்தந்தி 14 Oct 2020 3:05 PM IST (Updated: 14 Oct 2020 6:20 PM IST)
t-max-icont-min-icon

கடந்த நான்கு வாரங்களில் இந்தியாவின் செயலில் உள்ள கொரோனா பாதிப்புகள் 11% குறைந்துள்ளன

புதுடெல்லி

இந்தியாவில் கொரோனா முதன் முதலில் பரவிய போது கேரளாவில் கொரோனா பாதிப்புகளின் எழுச்சி, வெடிப்பை எதிர்த்துப் போராடுவதில் ஒரு முன்மாதிரியான மாநிலமாகப் புகழப்பட்டது. ஆனால் தற்போது கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 3 லட்சத்தை தாண்டி உள்ளது. 

நேற்று கேரளா மற்றும் மேற்குவங்காளத்தில் மூன்று லட்சம் கொரோனா பாதிப்புகளை தாண்டின.கேரளாவில் புதிய நோய்த்தொற்றுகள் மீண்டும் உயர்ந்தன, நேற்று 8,764 கொரோனா பாதிப்புகள் உறுதிபடுத்தப்பட்டன. இது நாட்டில் நேற்று அதிக பாதிப்புள்ள மாநிலமாகும்.

மராட்டியம் கடந்த ஏழு மாதங்கள் நாட்டில் மிக அதிகமான தினசரி பாதிப்புகளை பதிவு செய்துள்ளது. ஆனால் நேற்று 8,522 நோய்த்தொற்றுகளுடன் மாநிலங்களில் இரண்டாவது இடத்திற்கு வந்தது. 

கடந்த திங்கட்கிழமை கர்நாடகாவில் அதிக கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருந்தது.

இந்தியாவின் செயலில் உள்ள பாதிப்புகள் கடந்த சில வாரங்களாக குறைந்து வருகிறது.  செவ்வாய்க்கிழமை தொடர்ந்து 12-வது நாளாக தொடர்ந்து சரிந்து கொண்டே இருக்கும்போது, இந்த போக்கு கேரளாவில் முற்றிலும் மாறுபட்டு உள்ளது. 

கடந்த நான்கு வாரங்களில் இந்தியாவின் செயலில் உள்ள பாதிப்புகள் 11% குறைந்துள்ளன, மறுபுறம் கேரளாவின் செயலில் உள்ள பாதிப்புகள் 233% அதிகரித்துள்ளன. இந்தியாவின் மொத்த செயலில் இருக்கும் பாதிப்புகள்  10% க்கும் அதிகமானவை கேரளாவில் உள்ளன.

Next Story