சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி


சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி
x
தினத்தந்தி 14 Oct 2020 10:48 PM IST (Updated: 14 Oct 2020 10:48 PM IST)
t-max-icont-min-icon

சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவுக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி, 

சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவுக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சமாஜ்வாதி கட்சி தனது டுவிட்டரில், “சமாஜ்வாதி கட்சியின் நிறுவனர் மரியாதைக்குரிய முலாயம் சிங் யாதவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அவரை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். தற்போதைய நிலையில், அவருக்கு எவ்வித கொரோனா அறிகுறியும் இல்லை” என்று பதிவிடப்பட்டுள்ளது.

Next Story