தேசிய செய்திகள்

பிரதமர் நரேந்திர மோடி சொத்து மதிப்பு அதிகரிப்பு ; அமித் ஷாவுக்கு குறைந்தது + "||" + Prime Minister Narendra Modi slightly richer, Home Minister Amit Shah's net worth falls: PMO

பிரதமர் நரேந்திர மோடி சொத்து மதிப்பு அதிகரிப்பு ; அமித் ஷாவுக்கு குறைந்தது

பிரதமர் நரேந்திர மோடி சொத்து மதிப்பு அதிகரிப்பு ; அமித் ஷாவுக்கு குறைந்தது
கடந்த ஆண்டை விட பிரதமர் நரேந்திர மோடியின் சொத்து மதிப்பு சற்று அதிகரித்து உள்ளது. உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் சொத்து மதிப்பு குறைந்து உள்ளது என பிரதமர் அலுவலகம் தெரிவித்து உள்ளது.
புதுடெல்லி

பிரதமர் நரேந்திர மோடியின் சொத்து நிகர மதிப்பு 2019 உடன் ஒப்பிடும்போது 2020 ஆம் ஆண்டில் ரூ .36 லட்சம் அதிகரித்துள்ளது என்பதை பிரதமர் அலுவலகத்தில் (பிஎம்ஓ) சமர்ப்பித்த சொத்து அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 

இருப்பினும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் நிகர மதிப்பு இந்த ஆண்டு கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது குறைந்து உள்ளது.

பிரதமர் மோடியின் சமீபத்திய சொத்து அறிக்கையின் படி அவரது நிகர சொத்து மதிப்பு 2020 ஜூன் 30 நிலவரப்படி ரூ .2.85 கோடியாக இருந்தது, அதே நேரத்தில் கடந்த ஆண்டு ரூ.2.49 கோடியாக இருந்தது. சுமார் 3.3 லட்சம் வங்கி வைப்பு மற்றும் 2019 ஆம் ஆண்டில் ரூ.33 லட்சம் மதிப்புள்ள பாதுகாப்பான முதலீடுகளின் வருமானம் காரணமாக பிரதமர் மோடியின் சொத்து ஓரளவு அதிகரித்துள்ளன.

பிரதமர் மோடியின் கையில் ரூ.31,450 ரொக்கமாகவும், வங்கி இருப்பு ரூ.3,38,173 ஆகவும், எஸ்பிஐ காந்திநகர் என்எஸ்சி கிளையில் வங்கி நிரந்தர வைப்பு மற்றும் எம்ஓடி இருப்பு ரூ,60,28,939 ரூபாயும் இருந்தது என்று பிரதமர் அலுவலகம் அறிவித்து உள்ளது.

பிரதமருக்கு ரூ.8,43,124 மதிப்புள்ள தேசிய சேமிப்பு சான்றிதழ்கள் (என்.எஸ்.சி), ரூ.1,50,957 மதிப்புள்ள ஆயுள் காப்பீட்டு மற்றும் ரூ.20,000 மதிப்புள்ள வரி சேமிப்பு இன்ஃப்ரா பத்திரங்கள் உள்ளன. பிரதமர் மோடி அறிவித்த அசையும் சொத்துக்கள் சுமார் ரூ1.75 கோடி ரூபாய் ஆகும்.

13.56 கோடி ரூபாய் மதிப்புள்ள 10 அசையா சொத்துக்களை அமித் ஷா வைத்துள்ளார். பிரதமர் அலுவலக அறிவிப்புகளின்படி. அவர் கையில் ரொக்கமாக ரூ.15,814, வங்கி இருப்பு மற்றும் காப்பீட்டில் ரூ.1.04 கோடி, ரூ .1347 லட்சம் மதிப்புள்ள ஓய்வூதிய பாலிசிகள், நிலையான வைப்புத் திட்டங்களில் ரூ.2.79 லட்சம் மற்றும் ரூ.44.47 லட்சம் மதிப்புள்ள நகைகள் உள்ளன.

2020 ஆம் ஆண்டில் அமித் ஷாவின் நிகர சொத்து மதிப்பு குறைந்தது, ஏனெனில் அவர் வைத்திருந்த மேற்கோள் பத்திரங்களின் சந்தை மதிப்பு வீழ்ச்சியடைந்தது.


தொடர்புடைய செய்திகள்

1. பண்டிகைகளை கொண்டாடும் போது வெகு கவனத்தோடு செயல்பட வேண்டும்- பிரதமர் மோடி
மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு பிரதமர் உரையாற்றி வருகிறார்.
2. இந்தியாவின் வளர்ச்சியில் பீகார் முன்னணியில் இருக்கிறது - பிரதமர் மோடி
பீகாரில் முந்தைய அரசுகள் ஊழல் வாய்ந்த அரசுகளாக இருந்தன என தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
3. மீனவர்களின் பாதுகாவலராக பிரதமர் மோடி செயல்படுகிறார் - எல்.முருகன்
பிரதமர் மோடி மீனவர்களின் பாதுகாவலராக செயல்படுவதாக பா.ஜ.க. மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
4. பீகாரில் பா.ஜ.க. கூடுதல் இடங்களை வென்றால் முதல்-மந்திரி யார்? அமித்ஷா பரபரப்பு பேட்டி
பீகாரில் பா.ஜ.க. கூடுதல் இடங்களை வென்றால் முதல்-மந்திரி பதவி யாருக்கு என்பது குறித்த கேள்விக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பதில் அளித்தார்.
5. தெலுங்கானா, ஆந்திர முதல்வர்களுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு
தெலுங்கானாவில் மழை தொடர்பான சம்பவங்களில் சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளனர்.