எல்லையில் தொடர்ந்து பயங்கரவாதிகளை பாகிஸ்தான் ஊடுருவ செய்து வருகிறது; ராணுவ தளபதி நரவானே


எல்லையில் தொடர்ந்து பயங்கரவாதிகளை பாகிஸ்தான் ஊடுருவ செய்து வருகிறது; ராணுவ தளபதி நரவானே
x
தினத்தந்தி 15 Oct 2020 11:29 AM GMT (Updated: 15 Oct 2020 11:29 AM GMT)

இந்திய எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதி வழியே பயங்கரவாதிகளை பாகிஸ்தான் ஊடுருவ செய்து வருகிறது என இந்திய ராணுவ தலைமை தளபதி நரவானே கூறியுள்ளார்.

புதுடெல்லி,

இந்திய ராணுவ தலைமை தளபதி முகுந்த் நரவானே செய்தியாளர்களிடம் இன்று கூறும்பொழுது, குளிர்காலம் தொடங்குவதற்கு முன்பு, 
இந்திய எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதி வழியே எந்தளவிற்கு முடியுமோ, அந்த அளவுக்கு பயங்கரவாதிகளை ஊடுருவ செய்வதும், ஆயுதங்களை கடத்துவதும் போன்ற தீங்கு விளைவிக்கும் செயல்களில் பாகிஸ்தான் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

எனினும், பயங்கரவாத ஒழிப்பு மற்றும் பயங்கரவாத ஊருருவல் தடுப்பு நடவடிக்கைகளில் நம்முடைய பாதுகாப்பு படையினர் திறம்பட செயல்படுகின்றனர்.  பல பயங்கரவாதிகளை படை வீரர்கள் சுட்டு கொன்றுள்ளனர்.  எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் ஊடுருவல் முயற்சிகள் முறியடிக்கப்பட்டு உள்ளன என கூறியுள்ளார்.

இந்திய எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதிகள் மற்றும் ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேச பகுதிகளில் சமீபத்தில் பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளை ஒழித்து வெற்றி பெற்றது பற்றி அவர் பெருமிதமுடன் கூறியுள்ளார்.

கடந்த செப்டம்பர் 24ந்தேதி முதல் அக்டோபர் 15ந்தேதி வரையிலான 3 வாரங்களில், பாகிஸ்தானிய நாட்டை சேர்ந்த பயங்கரவாதிகள் உள்பட அந்நிய நாட்டு பயங்கரவாதிகள் 3 பேர் என்று மொத்தம் 17 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படை வீரர்கள் என்கவுண்ட்டரில் சுட்டு கொன்றுள்ளனர்.

Next Story