முதுகு சொறிய ஜே.சி.பியை பயன்படுத்திய முதியவர் வைரலாகும் வீடியோ
முதியவர் ஒருவர் முதுகு சொறிய ஜே.சி.பி பயன்படுத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
திருவனந்தபுரம்
பேஸ்புக்கில் வைரலாகி வரும் இந்த வீடியோ 3 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளையும், 2 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும், பெற்று வைரலாகி வருகின்றது.
கட்டுமானம், விவசாயம், இடிப்புப்பணி, பூமி தோண்டுதல் , அகழ்வுப் பணிக்காக ஜே.சி.பி இயந்திரம் பயன்படுத்த படுகின்றது. அவ்விதம் பயன்படுத்த பட்ட ஜே.சி.பி இயந்திரத்தை கொண்டு முதியவர் ஒருவர் வேலை முடிந்த பின்னர் தனது முதுகினை சொறிந்து கொள்ள பயன்படுத்தியுள்ளார்.
துண்டால் முதுகினை சொறிந்த பின்னரும் அது திருப்தி அளிக்காத காரணத்தால், ஜே.சி.பி ஆபரேட்டரை கொண்டு இயந்திரத்தை இயக்க வைத்து சொரிந்து கொள்கிறார். கிரேன் ஆபரேட்டரும், முதியவரும் விளையாட்டாக செய்யும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Related Tags :
Next Story