ஆந்திராவில் இன்று மேலும் 4,038 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


ஆந்திராவில் இன்று மேலும் 4,038 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 15 Oct 2020 2:31 PM GMT (Updated: 2020-10-15T20:01:26+05:30)

ஆந்திராவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.

அமராவதி,

ஆந்திர மாநிலத்தில் முதலில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருந்தது. அதையடுத்து கடந்த மாதத்தில் இருந்து கொரோனா பாதிப்பு மிக அதிக எண்ணிக்கையில் இருப்பது கண்டறியப்பட்டு வந்தது. இதையடுத்து கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. 

இந்நிலையில் ஆந்திர மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மாநிலத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 4,038 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆந்திராவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,71,503 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரே நாளில் 38  பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் ஆந்திர மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,357 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது மாநிலம் முழுவதும் 40,047 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இன்று மட்டும் 5,662 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளநிலையில், இதுவரை 7,19,477 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story