அரசு அதிகாரிகள் கூட்டத்தில் ஒருவரை சுட்டு கொன்ற பா.ஜனதா எம்.எல்.ஏ உதவியாளர்


அரசு அதிகாரிகள் கூட்டத்தில் ஒருவரை சுட்டு கொன்ற பா.ஜனதா எம்.எல்.ஏ உதவியாளர்
x
தினத்தந்தி 16 Oct 2020 5:02 AM GMT (Updated: 16 Oct 2020 5:02 AM GMT)

உத்தரப்பிரதேச அரசு அதிகாரிகள் கூட்டத்தில் பா.ஜனதா எம்.எல்.ஏ உதவியாளர் ஒருவரை சுட்டுக்கொன்று விட்டு தப்பி ஓடி விட்டார்.

லக்னோ: 

உத்தரபிரதேசம்  பல்லியாவில் ரேஷன் கடைகளைத் அமைப்பதற்கான கூட்டத்தில் ஏற்பட்ட தகராறில் உள்ளூர் நிர்வாக அதிகாரிகள் முன் பாஜக எம்.எல்.ஏவின் உதவியாளர் தீரேந்திர சிங் ஒருவரை சுட்டுக் கொன்றார். பின்னர் அவர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

கொலையாளியால் 20 ரவுண்டுகள் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டவரின் சகோதரர் சந்திரமாவின் புகாரின் பேரில் 15-20 பேர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சம்பவ இடத்தில் இருந்த போலீஸ் அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டனர் குற்றம் சாட்டப்பட்ட தீரேந்திர சிங் பாஜக எம்எல்ஏ சுரேந்திர சிங்கின் நெருங்கிய உதவியாளர் ஆவார்.

இந்த சம்பவத்தை தீவிரமாக கவனித்து, சம்பவ இடத்தில் இருந்த போலீசார்  அனைவரும் உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டு உள்ளார் என்று உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் அவனிஷ் குமார் அவஸ்தி தெரிவித்தார்.

இந்த சம்பவத்திற்கு உத்தரபிரதேச எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன 


Next Story