நாங்கள் பாதுகாப்பாக இருக்க, டெல்லிக்கு மாற விரும்புகிறோம் - ஹத்ராஸ் பாதிக்கபட்ட பெண்ணின்குடும்பம்


நாங்கள் பாதுகாப்பாக இருக்க, டெல்லிக்கு மாற விரும்புகிறோம் - ஹத்ராஸ் பாதிக்கபட்ட பெண்ணின்குடும்பம்
x
தினத்தந்தி 16 Oct 2020 1:14 PM IST (Updated: 16 Oct 2020 1:14 PM IST)
t-max-icont-min-icon

நாங்கள் பாதுகாப்பாக இருக்க விரும்புகிறோம் ஹத்ராஸ் கற்பழிப்புக்குள்ளான பெண்ணின் குடும்பம் டெல்லிக்கு மாற்றப்பட வேண்டும் என விரும்புகிறது.

புதுடெல்லி

உத்தரபிரதேச மாநிலம், ஹத்ராஸில் தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்த 19 வயது பெண்  கடந்த  மாதம் கூட்டு கற்பழிப்பு, சித்ரவதைக்கு ஆளாகி கொல்லப்பட்டார். அவரது உடல், வலுக்கட்டாயமாக இரவோடு இரவாக தகனம் செய்யப்பட்டது, நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

பாதிக்கபட்ட பெண்ணின் குடும்பத்தினர், தங்களின் “பாதுகாப்பை” உறுதி செய்வதற்காக டெல்லிக்கு மாற்றப்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள், மேலும் தங்கள் கிராமத்திலிருந்து வெளியேற மாநில அரசு உதவுமாறு கேட்டுக் கொண்டனர். பாதிக்கப்பட்டவரின் சகோதரர் வெள்ளிக்கிழமை செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ.யிடம் கூறியதாவது:-

"வழக்கு டெல்லிக்கு மாற்றப்பட வேண்டும் என்று குடும்பம் விரும்புகிறது, நாங்கள் அங்கு மாற விரும்புகிறோம். இது சம்பந்தமாக அரசாங்கம் எங்களுக்கு உதவ வேண்டும், நாங்கள் அவர்களைச் சார்ந்து இருக்கிறோம். நாங்கள் எங்கிருந்தாலும் பாதுகாப்பாக இருக்க விரும்புகிறோம், ”என்று அவர் கூறினார்.


Next Story